காலைத் தியானம் – டிசம்பர் 14, 2020

ரோமர் 8: 28 – 39    

அவர்களைத் தமது குமாரனுடைய சாயலுக்கு ஒப்பாயிருப்பதற்கு முன்குறித்திருக்கிறார்   

மனிதராகிய நாம் அனைவரும் குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் சாயலுக்கு ஒப்பாயிருக்கவேண்டும் என்பதுதான் தேவனுடைய விருப்பம்.  முன்குறித்திருக்கிறார் என்ற வார்த்தையை வைத்து, தேவன் ஒரு சிலரை மாத்திரம் தெரிந்துவைத்திருக்கிறார் என்று நினைப்பவர்கள் உண்டு. அழைக்கப்பட்டவர்களில் யார் அழைப்பை ஏற்று நீதிமான்களாக இருக்கப் போகிறார்கள் என்பதை தேவன் “முன்னதாகவே” அறிந்திருப்பதால், அவர்களை மாத்திரம் இயேசுவின் சாயலுக்கு ஒப்பாயிருக்கும்படி ”குறித்து” வைத்துவிட்டார் என்று வேறு சிலர் நினைக்கிறார்கள். இந்த இரண்டு கருத்துக்களுமே முழுமையானவை அல்ல. மனிதரைப் படைப்பதற்கு முன்னதாகவே அவர்கள் அனைவரும் குமாரனுடைய சாயலில் இருக்கவேண்டும் என்பது தேவனுடைய “முன்குறிப்பு”. அது இடைக்காலத்தில் வந்த “பின்குறிப்பு” அல்ல.  அனைவரும் அழைக்கப்பட்டவர்கள். அழைப்பை ஏற்றுக்கொள்வதும் ஏற்றுக்கொள்ளாமல் இருப்பதும் நம்முடைய விருப்பம். It is our choice. நீ அழைப்பை ஏற்றுக்கொண்டிருக்கிறாயா?                     

ஜெபம்

ஆண்டவரே, உம்முடைய அழைப்பை நான் புறக்கணிக்க மாட்டேன். இயேசு கிறிஸ்துவின் சாயலுக்கு ஒப்பாயிருக்கும்படி என்னையும் மாற்றியருளும். ஆமென்.