காலைத் தியானம் – நவம்பர் 04, 2021

சங் 47: 1 – 9

தேவன் பூமியனைத்திற்கும் ராஜா

                           ஆபிரகாமின் தேவன், ஈசாக்கின் தேவன், யாக்கோபின் தேவன் என்றழைக்கப்படும் கர்த்தர் (யாத் 3:6; 1 இராஜா 18:36) இஸ்ரவேல் மக்களுக்கு மட்டும் சொந்தமான தேவன் இல்லை. அவர் உலக மக்கள் அனைவருக்கும் தேவன். தேவனை விசுவாசிக்கிறவர்களாகிய நாம், விசுவாசிகளின் தகப்பன் என்றழைக்கப்படும் ஆபிரகாமின் பிள்ளைகள். ஆபிரகாமின் தேவன் நமக்கும் தேவன். இன்றும் நம் நாட்டில் பலர், இயேசு கிறிஸ்து அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளின் கடவுள் என்று நினைக்கிறார்கள். அது தவறு. இயேசு கிறிஸ்து பூமியனைத்திற்கும் ராஜா. அவர் இந்தியாவிற்கும் ராஜா.

ஜெபம்:

ஆண்டவரே, இந்தியாவிலுள்ள என் சகோதரர், சகோதரிகள் அனைவருக்கும் நீரே ராஜா என்பதற்காக உம்மைத் துதிக்கிறேன். ஆமென்.