காலைத் தியானம் – ஏப்ரல் 21, 2022

மாற்கு 5: 21 – 34

அவருடைய வஸ்திரத்தைத் தொட்டாள் 

                             இந்தப் பெண்ணின் விசுவாசம் பெரியது.  இயேசுவின் வஸ்திரத்தைத்  தொட்டால் சுகம் கிடைக்கும் என்று விசுவாசித்து, அவர் பக்கத்தில் வந்து அவருடைய வஸ்திரத்தைத் தொட்டாள். வஸ்திரத்தைத் தொட்டால்தான் சுகம் கிடைக்கும் என்று அர்த்தம் இல்லை. ஜெப ஆலயத் தலைவன் சொன்னதைக் கவனியுங்கள். நீர் வந்து என் குமாரத்தி மேல் உமது கைகளை வைத்தால் அவள் பிழைப்பாள் என்றான். தேவன் சர்வ வல்லமை உள்ளவர். அவர் நம் அருகில் இருந்தாலே போதும். நாம் சுகம் பெற்று விடுவோம். மார்த்தாள் அப்படித்தான் சொன்னாள். அவர் ஒரு வார்த்தை சொன்னால் கூட போதும். நமக்கு சுகம் கிடைத்துவிடும். உன் விசுவாசத்தின் படியே உனக்கு ஆகக்கடவது.

ஜெபம்:

ஆண்டவரே, நீர் எப்பொழுதும் என் அருகிலேயே இரும். நீர் என்னைப் பிடித்துள்ள பிடியை விட்டு விடாதேயும். ஆமென்.