காலைத் தியானம் – ஜூன் 27, 2022

லூக்கா 4: 33 – 44

அவர்கள் ஒவ்வொருவர் மேலும் தம்முடைய கைகளை வைத்து அவர்களை சொஸ்தமாக்கினார்

                      இயேசு செல்லும் இடமெல்லாம் திரளான மக்கள் வந்து அவரை சூழ்ந்து கொண்டார்கள். அவர் விரும்பியிருந்தால் அத்தனை பேரையும் மொத்தமாக ஒரே வார்த்தையில் குணமாக்கியிருக்கலாம். ஆனால் இயேசு அப்படிச் செய்யவில்லை. ஒவ்வொருவர் மீதும் தனித்தனியாக தம் கைகளை வைத்து, அவர்களைக் குணப்படுத்தினார். அவர் யாரையும் கூட்டத்தில் ஒருவன் என்று நினைக்கிறதில்லை. உன்னுடன் தனிப்பட்ட முறையில் உறவு வைத்துக் கொள்வதையே அவர் விரும்புகிறார். அவருக்கு உன் பெயர் தெரியும். உன்னைத் தம் உள்ளங்கையில் வரைந்து வைத்திருக்கிறார். அப்படிப்பட்ட உன் ஆண்டவரிடம் நீ எப்படிப்பட்ட உறவு வைத்திருக்கிறாய்?

ஜெபம்:

ஆண்டவரே, நான் உயிரோடிருக்கும் ஒவ்வொரு நிமிடமும் உம்மோடு பேசிக் கொண்டேயிருக்கும் பாக்கியத்தை எனக்குத் தாரும். ஆமென்.