காலைத் தியானம் – ஜூலை 03, 2021

செப் 1: 11- 18   

கர்த்தருடைய பெரிய நாள் சமீபித்திருக்கிறது

                              இன்றும் கடவுள் யார் என்ற கேள்விக்கு சரியான பதில் அநேகருக்குத் தெரியாது. கடவுளே இல்லை என்று சொல்லும் நாஸ்திகர்களும் உண்டு. கடவுள் இருக்கிறாரா அல்லது இல்லையா என்றே எனக்குத் தெரியாது என்று சொல்பவர்களும் (agnostics) பலர் உண்டு. யாரை அல்லது எதை வேண்டுமானாலும் வணங்கலாம் என்ற நிலையும் பலரிடம் உண்டு. இதே நிலைதான் செப்பனியா தீர்க்கதரிசியின் நாட்களில் யூதா நாட்டிலும் இருந்தது. அன்று கர்த்தருடைய நாள் சமீபமாயிருந்தது. குறித்த அந்த நாளில் பாபிலோனியர் வந்து எருசலேமை அழித்துப் போட்டார்கள். நமக்கும் நியாயத்தீர்ப்பு நாளாகிய கர்த்தருடைய பெரிய நாள் சமீபமாயிருக்கிறது. யூதாவின் மக்கள் அலட்சியமாக இருந்ததைப் போல நீயும் அலட்சியமாக இருந்துவிடாதே. கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை அறிந்துகொண்டு அவருடைய இரட்சிப்பைப் பெற்றுக்கொள்.                         

ஜெபம்:

ஆண்டவரே, உம்முடைய நியாயத்தீர்ப்பின் நாளுக்காக நான் எப்பொழுதும் தயாராக இருக்க உதவி செய்யும். ஆமென்.