காலைத் தியானம் – மார்ச் 09, 2022

மத் 25: 1 – 13

கல்யாண வீட்டுக்குள் பிரவேசித்தார்கள்

                              அந்தக் காலத்தில் யூதர்கள் வீட்டுத் திருமண விருந்தும் கொண்டாட்டமும் ஒரு வார காலம் இருக்குமாம். மகிழ்ச்சியையும் கொண்டாட்டத்தையும் தவிர வேறே எதைக் குறித்தும் நினைக்கக்கூட நேரமிருக்காது. பரலோகம் அதைவிட பல மடங்கு அதிக மகிழ்ச்சி நிறைந்த இடமாக இருக்க வேண்டும். நாம் அனைவரும் விருந்துக்கு அழைக்கப்பட்டவர்கள். மண மகனாகிய இயேசு கிறிஸ்துவுக்கு மிகவும் நெருக்கமானவர்கள் என்ற காரணத்தால் திருமண விருந்துக்கு அழைக்கப்பட்டவர்கள். அந்த நெருக்கமான உறவைக் காத்து வருகிறாயா? இல்லாவிட்டால் ’உன்னை அறியேன்’ என்று அவர் சொல்லி விடுவார் (வசனம் 12). பரிசுத்தவான்களோடு நெருங்கிப் பழகுவதால் அவர்களிடமிருந்து பரிசுத்தத்தை (எண்ணையை) உன் கணக்கிற்கு கொஞ்சம் மாற்றிக்கொள்ள முடியாது. உன் ஆண்டவரோடு நீ வைத்துக் கொள்ளும் உறவு மாத்திரமே உன்னைப் பரிசுத்தமாக வைத்துக் கொள்ளும். உன் பரிசுத்தத்திற்கு நீயே பொறுப்பு.

ஜெபம்:

ஆண்டவரே, நீர் என்னிடம் எதிர்பார்க்கும் நெருக்கத்தைக் காத்துக்கொள்ள எனக்கு உதவி செய்யும். ஆமென்.