காலைத் தியானம் – நவம்பர் 27, 2020

யோபு 22: 1 – 30                                                 

நீர் சர்வவல்லவரிடத்தில் மனந்திரும்பினால்  

எலிப்பாசின் கூற்றில் உண்மையும் உண்மையற்ற செய்தியும் கலந்திருக்கின்றன. கர்த்தரை விட்டு விலகிப் போனவன் மனந்திரும்பி அவரிடத்திற்கு வந்தால், அவன் வாழ்க்கை திரும்பக் கட்டப்படும் என்பது உண்மை. சர்வவல்லவரே அவனுக்குப் பசும்பொன்னும் சொக்கவெள்ளியுமாயிருப்பார் என்பதும் உண்மை. ஆனால் மனதிரும்புகிற ஒவ்வொருவனும் தூளைப் போல பொன்னையும், ஆற்றுக் கற்களைப் போல தங்கத்தையும் சேர்த்து வைப்பான் (வசனம் 24) என்பது உண்மையல்ல. ஒருவேளை மனந்திரும்பி கர்த்தரை இரட்சகராக ஏற்றுக்கொண்ட ஒரு சிலருக்கு அப்படிப்பட்ட செல்வம் இருந்தாலும், அவைகள் ஏழைகளுக்கு உதவி செய்வதற்காகவே அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சேர்த்து வைக்க அல்ல. பூலோகத்தில் உங்கள் பொக்கிஷங்களைச் சேர்த்து வைக்காதீர்கள் என்பது இயேசு கிறிஸ்துவின் கட்டளை.

ஜெபம்

ஆண்டவரே, என்னிடத்தில் நீர் ஒப்படைக்கும் பணத்தையும் செல்வத்தையும் நான் சுயநலத்தோடு சேர்த்து வைக்காதபடி என்னை வழிநடத்தும். ஆமென்.